தமிழ் சினிமா பலவிதமான கதாநாயகியரைக் கடந்து வந்துள்ளது. சிலர் ஒன்றிரண்டு படங்கள் நடித்து அப்படங்களில் தங்களின் பங்களிப்பை அழுத்தமாக பதிவு செய்துவிடுவார்கள். அதன் பின் அவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் பிஸியாகிவிடுவதும் உண்டு.

பெங்களூரைப் பூர்விகமாக கொண்ட வசுந்திரா தாஸ் அப்படிப்பட்ட ஒரு நடிகை. நடிப்பு தவிர்த்து கவிதை எழுதுபவர், திறமையான பேச்சாளர் மற்றும் பாடகியாகவும் புகழ் பெற்று விளங்கினார். தமிழில் கமல் ஹாசனுடன் ஹேராம் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார். அவரின் குரலும் கொஞ்சிப் பேசிய தமிழ் மொழியும் அப்போதைய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதன் பின் மலையாள திரையுலகிலும் ஜொலித்தார் வசுந்திரா. அவர் நடிப்பில் வெளியான ராவண பிரபு என்ற படம் திறமையான நடிகை என்ற பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் முதன் முதலில் தமிழில் பாடிய பாடல் ஷக்கலாகா பேபி இன்றும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அமுல் பேபி போல அழகுடன் திகழ்ந்த வசுந்திரா தமிழில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்த படமான சிட்டிசன் பெரும் புகழை அவருக்கு ஏற்படுத்தியது. பூக்காரா என்ற பாடலை அவரே பாடி, அஜித்துடன் நடித்திருந்தார் வசுந்தரா தாஸ்.

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என்று பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் ராபர்டோ நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு டிரம்மர். அதன் பின் நடிப்புக்கு குட் பை சொல்லில்விட்டு இசையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். கணவருடன் இணைந்து ட்ரம்ஜாம் என்ற அமைப்பை நடத்திவருகிறார். சிறந்த பேச்சாளர், பாடகி என்று தொடர்ந்து பிஸியாக இயங்கிவருகிறார்.

சமீபத்தில் அவரது புகைப்படங்கள் மீடியாவில் வெளியாகி உள்ளன.

உடல் எடை சற்று அதிகரித்திருந்தாலும், அதே அழகுடனும் மிடுக்குடனும் காணப்படுகிறார் வசுந்திரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் ராஜேந்திரனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

கரும்பு ஜூஸ் போட்டும் ஆட்டோவில் பயணித்தும் முதல்வர் பிரசாரம்!
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


