/

கோலிவுட்டில் களம் இறங்குகிறாரா பிக் பாஸ் ஜூலி?

பிக்பாஸ் நிகழ்ச்சியி பங்குபெற்ற சமயத்தில் கடுமையான சர்ச்சைக்கும் ரசிகர்களின் அதிருப்திக்கும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:52 am

சினேகா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சமயத்தில் கடுமையான சர்ச்சைக்கும் ரசிகர்களின் அதிருப்திக்கும் உள்ளானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு நிகழ்வில் அவர் பெற்ற நற்பெயரை ஒரேடியாக இழந்தார். அதன் பின் அந்நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறிய பின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தொகுப்பாளரானார். சில விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். 

Story image

பெரிதாக எந்த ப்ரேக்கும் அவருக்கு கிடைக்காமல் இருந்த சமயத்தில், தற்போது அவர் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. K7 புரொடக்‌ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படத்தில் ஜூலி கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.

Story image

ஜூலி இப்படத்தைப் பற்றிக் கூறுகையில், 'இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதன் கதையை கேட்டதும் பிடித்துவிட்டதால் ஓகே சொன்னேன். இந்தப்படம் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றார். இந்தப் படத்தில் துரை சுதாகர் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறாராம்.

இப்படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றார் ஜூலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.