மாறன் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில், அருள்நிதி, ஆனந்த்ராஜ், அஜ்மல், மகிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. தனது முதல் படத்தைப் பற்றி இயக்குனர் மு. மாறன் கூறியது,
‘நான் பத்திரிகையாளராக பலவருடம் பணிபுரிந்த பின் திரைத்துறைக்கு வந்துள்ளேன். என்னுடைய முதல் படம் த்ரில்லர் ஜானரில் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ஹீரோ ஒரு கால் டாக்ஸி ட்ரைவர். ஓரிரவு எதிர்பாராத விதமாக அவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள, அதிலிருந்து அவர் எப்படி தப்புகிறார் என்பதை மையமாக வைத்துத்தான் இதன் திரைக்கதையை உருவாக்கினேன். இதிலுள்ளெ மெசேஜ் என்னவென்றால், யாரையுமே ஈஸியா நம்பிடாதீங்க. நல்லவங்களா இருக்குறவங்களுக்குக் கெட்ட சகவாசம் கிடைச்சதும், அவங்களும் கெட்டவங்களா மாற வாய்ப்பு நிறையா இருக்கு. என்பதுதான்.

இந்தப் படத்தில் அருள்நிதி முற்றிலும் வேறாக தன்னை உருமாற்றிக் கொண்டு நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் வித்யாசமாக அமைத்துள்ளேன்’ என்றார் மாறன். மேலும் அவர் கூறுகையில், 'ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்தான் இப்படத்தை நான் நினைத்த வகையில் இயக்க முடிந்தது என்றார். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைக்கு வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள்’ என்று கூறினார்.

இந்தப் படத்தில் அருள்நிதி, மகிமா காதல் காட்சிகளை அழகியலுடன் அமைத்திருக்கிறாராம் இயக்குநர். விக்ரம் வேதா புகழ் சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அரவிந்த் சிங் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார் என்றார் புதுமுக இயக்குனர் மு.மாறன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


