தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தொழில் அதிபரை மணமுடிக்கவிருக்கிறாரா நடிகை காஜல் அகர்வால்?

2004-ம் ஆண்டு பாலிவுட்டில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிய காஜல் அகர்வால், தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகி மஹதீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

News image
Updated On :28 பிப்ரவரி 2018, 6:03 am

2004-ம் ஆண்டு பாலிவுட்டில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிய காஜல் அகர்வால், தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகி மஹதீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழில் 'நான் மகான் அல்ல’படத்தை தொடர்ந்து மாற்றான், ஜில்லா மாரி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்த படங்களாகும். 

Story image

காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இதுவரை கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துவிட்ட காஜல் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நாயகியாக உள்ளார். 32 வயதாகும் காஜலுக்கு அவரது பெற்றோர்கள் விரைவில் திருமணம் செய்துவைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காஜலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு 2013-ம் ஆண்டு திருமணம் நடந்து அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 

Story image

காஜல் அகர்வாலின் திருமணம் பெற்றோர் நிச்சயித்ததாக இருக்குமா அல்லது காதல் திருமணமா என்று தெரியாத நிலையில், காஜல் அகர்வால், மும்பையில் உள்ள இளம் தொழிலதிபரை காதலிக்கிறார் என்ற தகவல் வெளியானது. பெற்றோரின் சம்மதம் கிடைத்ததும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளார் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.