சிவகாசியில் பிறந்து, கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் மற்றும் பாலிவுட் என இந்தியத் திரையில் உச்சத்தை தொட்டவர் நடிகை ஸ்ரீதேவி. அவரது மறைவுக்கு இந்திய திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.
நேற்று இரவு (பிப் 24,2018) 11.30 மணி அளவில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் பூத உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது துபாயில் மருத்துவ நடைமுறைகள் முடிந்து தலைமை காவல் அலுவலகத்திற்கு ஸ்ரீதேவியின் உடல் எடுத்து வரப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவியின் உடலை துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூதரக அனுமதி கிடைத்தவுடன் ஸ்ரீதேவியின் உடல் இந்திய கொண்டுவரப்பட உள்ளதாகவும் இன்று இரவு 8 மணிக்கு மும்பை கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கொண்டுவரப்படும் உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியின் பூத உடலைக் காணவும் இறுதி அஞ்சலி செலுத்தவும் திரையுலகமும் அவரது ரசிகர்களும் ஒட்டுமொத்த மீடியாவும் அவரது வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


