எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சிவகார்த்திகேயனுக்கு வில்லியாகி மிரட்டும் நடிகை சிம்ரன்!

கோலிவுட்டில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை சிம்ரன். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தென்னிந்திய திரையில் கனவுக் கன்னியாக புகழ் பெற்று விளங்கினார்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:20 pm

ராக்கி

கோலிவுட்டில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை சிம்ரன். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தென்னிந்திய திரையில் கனவுக் கன்னியாக புகழ் பெற்று விளங்கினார். தன் காதலர் தீபக்கை மண வாழ்க்கையில் கரம் பிடித்ததும் சினிமாவுக்கு தற்காலிகமாக விடை கொடுத்தார் சிம்ரன்.

தற்போது சிம்ரன் கேமியோ ரோல்கள் சிலவற்றில் நடித்துவருகிறார். வணங்காமுடி என்ற படத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார். இப்படத்தில் அவர் போலீஸ் ரோலில் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் சிம்ரன். 

Story image

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அசால்டாக நடித்து ஸ்கோர் செய்துவிடும் சிம்ரன், சீமராஜாவில் சிவகார்த்திகேயனை தனது மிரட்டல் நடிப்பால் அசத்திவிடுகிறார் சிம்ரன் என்றனர் படக்குழுவினர். இதற்கு முன்னதாக 'பார்த்தேன், ரசித்தேன்' என்ற படத்தில் பிரசாந்த் லைலா ஜோடிக்கு எதிராக வில்லத்தனம் செய்தவர் சிம்ரன் என்பதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சீமராஜாவில் சிம்ரனுக்கு அழுத்தமான கதாபாத்திரம் என்பதால் இப்படம் தன்னுடைய மறுபிரவேசத்தை வரவேற்கும் என்று எதிர்ப்பார்க்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.