திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

'சாணக்ய தந்திரம்' படத்துக்காக பெண் வேடமிட்டு நடித்த இந்த 'அழகி’ய நடிகர் யார்? விடியோ

ஒரு பெண்ணாக நடிப்பது கூடக் கஷ்டம் இல்லை ஆனால் பெண் வேஷம் போட்டுக் கொள்வது எவ்வளவு கஷ்டம் என்று அந்த வேஷத்தில் நடித்தவர்களிடம் கேட்டால் தெரியும்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:19 pm

உமாகல்யாணி

ஒரு பெண்ணாக நடிப்பது கூடக் கஷ்டம் இல்லை, ஆனால் புடவை, நகைகள் அணிந்து முழுவதுமாக பெண் வேஷம் போட்டுக் கொள்வது எவ்வளவு கஷ்டம் என்று அவ்வேஷத்தைப் போட்டு முழு நீளப் படத்தில் நடித்தவர்களிடம் கேட்டால் தெரியும். கமல்ஹாசன் அவ்வை சண்முகியில் தன்னுடைய ஒட்டுமொத்த உருவத்தை நடுத்தர வயது பெண்ணாக மாற்றியிருப்பார்.

Story image

ரெமோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நர்ஸாக நடித்து கலக்கியிருப்பார். விரைவில் வெளிவரவிருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியும் ஷில்பா என்ற பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Story image

இப்படி கோலிவுட்டில் சில முன்னணி நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்துள்ளார்கள் என்பது நமக்குத் தெரியும். மல்லுவுட்டில் இதுவரை பிரித்வி ராஜ், ஜெயராம் உள்ளிட்ட வெகு சிலரே பெண் வேடத்தில் நடித்துள்ளனர்.

Story image

தற்போது அந்தக் குறையை போக்கும் விதமாக மலையாள நடிகர் உண்ணி முகுந்தன் 'சாணக்ய தந்திரம்' என்ற படத்தில் பெண் வேடமிட்டு நடிக்கிறார்.

Story image

உண்ணி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர். தமிழில் 2011-ம் ஆண்டு வெளியான சீடன் என்ற படத்தில் நடித்துள்ளார் உண்ணி முகுந்தன். மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இவர் நடித்த விக்ரமாதித்யன் பெரிய ஹிட்டானது. அண்மையில் பாகமதியின் நடித்து டோலிவுட்டிலும் நல்ல வரவேற்பு அவருக்குக் கிடைத்துள்ளது. 

Story image

கண்ணன் தாமரக்குளம் இயக்கிவரும் சாணக்ய தந்திரம் எனும் த்ரில்லர் படத்தில் உண்ணி முகுந்தன் டிடெக்டிவ்வாக நடிக்கிறார். ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் சுவிதா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் உண்ணி நான்கு விதமான கெட்டப்களில் நடிக்கிறார்.

Story image

அதில் ஒன்று தான் கரிஷ்மா என்ற பெண் வேடம். கரிஷ்மாவாக அவர் கலக்கும் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி மல்லுவுட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த மேக் அப்பை அவர் போட்டுக் கொள்ளும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மலையாளச் சேச்சிகள் மட்டுமல்ல சேட்டன்களையும் வரவேற்கிறோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.