இலியானா நடிக்க வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதுவும் பாலிவுட்டில் அவர் கவனம் திரும்பி ஆறு ஆண்டுகளாகிவிட்டது. தற்போது நடிகர் அஜய் தேவ்கனுடன் ரெய்ட் என்ற படத்தில் நடித்துவருகிறார். அண்மையில் ஹிந்தி பத்திரிகைக்கு பேட்டி அளித்த இலியானா அதில் வெளிப்படையாக தனது டோலிவுட் மற்றும் பாலிவுட் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இலியானா கூறியது, ‘நான் அறிமுகம் ஆனது இயக்குநர் சவுத்ரியின் தேவதாசு என்ற தெலுங்குப் படத்தில்தான். ராம், ஸ்ரேயா, சாயாஜி ஷிண்டே ஆகியோர் நடித்த அந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்கு 18 வயதுதான். அந்தப் படத்தில் சிறந்த புதுமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது. முதல் படம் வெற்றிப் படமாக அமைந்ததால் தொடர்ந்து வாய்ப்புக்கள் குவிந்தன என்பதெல்லாம் மறுக்க முடியாதவை.

ஆனால் இன்று வரை புரியாத புதிராக இருப்பது ஏன் தென்னிந்தியப் படங்களில் நடிகைகளின் தொப்புக்களை மையப்படுத்த்கிறார்கள் என்று தெரியவில்லை. தேவதாசு படத்தில் இயக்குநர் சவுத்ரி ஒரு பாடல் காட்சிக்காக ஒரு சங்கை என் தொப்புளில் வைத்து நடிக்கச் சொன்னார்.

ஏன் என்று நான் கேட்டதற்கு அந்தக் காட்சி அழகாக இருக்கும் என்று மட்டும் சொன்னார். எனக்கு அப்படி நடிக்க இஷ்டமே இல்லை என்றாலும் நடிப்பில் எனது ஆரம்ப காலம் என்பதால் என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பணத்துக்காகவும், புகழுக்காகவும் வேறு வழியில்லாமல் நடித்தேன்.

அதற்குப் பிறகு சில தெலுங்குப் படம் மற்றும் தமிழ்ப் படங்களிலும் நடித்தேன். அவற்றிலும் இந்த தொப்புள், மற்றும் இடை பிரச்னைகள் தொடர்ந்தன.

உங்கள் இடை மிகவும் அழகாக உள்ளது. பெண்மையின் நளினத்தை காட்சிப்படுத்துவதில் என்ன தவறு என்று சில இயக்குநர்கள் என்னை கன்வின்ஸ் செய்வார்கள்.

வலிந்து திணிக்கப்படும் தொப்புள் காட்சிகளில் நடிப்பதில்லை என என்னுடைய ஏழாவது தென்னிந்திய படத்தில் நடிக்கும் போது முடிவெடுத்தேன்.

அதன்பின் பாலிவுட்டில்தான் தொடர்ந்து நடித்து வருகிறேன்.

நல்லவேளை இங்கு எனக்கு இது போன்ற பிரச்னைகள் இல்லை. எனக்குப் பிடிக்காத விஷயங்களைத் தவிர்த்து என் மனது ஒப்பிய விஷயங்களை மட்டும் அனுமதித்து நடிக்கும் சுதந்திரம் பாலிவுட்டில் இருப்பதை உணர்கிறேன். அதனால் தான் என்னால் இங்கு தொடர்ந்து நடிக்க முடிகிறது.

தென்னிந்திய படங்களில் இன்னமும் இது போன்ற காட்சிகளை இன்று வரை படமெடுக்கிறார்கள் தொப்புளில் அப்படி என்ன தென்னிந்தியர்களுக்குக் மோகமோ என எனக்குப் புரியவேயில்லை.

இதுவே தொடர்ந்தால், தென்னிந்திய கதாநாயகிகள் கவர்ச்சிக்காக மட்டுமே பெயர் பெற முடியும்.’ என்று கூறினார் இடுப்பழகி இலியானா டி க்ரூஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓராண்டாக நீடிக்கும் நடவடிக்கை! இந்திய வானில் மே 24 வரை பாக். விமானங்கள் பறக்க தடை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


