பல நடிகர்கள் சின்னத் திரையில் அறிமுகமாகி பிரபலம் ஆனதும் வெள்ளித் திரைக்கு வருவார்கள். விஜய் சேதுபதி. மாதவன், பாலிவுட்டில் ஷாருக்கான் என பலர் முதலில் சீரியலில் நடித்த பின் சினிமாவில் நடித்தார்கள். போலவே சினிமாவிலிருந்து சின்னத் திரைத் தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர்கள் ராதிகா, ரேவதி உள்ளிட்ட பல நடிகைகளைச் சொல்லலாம். இந்த வரிசையில் அண்மையில் இணைந்திருப்பது நடிகர் ஆர்யா.
சில மாதங்களுக்கு முன்பு, என்னை திருமணம் செய்து கொள்ள ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஒரு அதிரடி விளம்பரத்தை விடியோவாக தனது டிவிட்டரில் வெளியிட்டிருந்தார் ஆர்யா. முதலில் இது ஒரு படத்துக்கான பப்ளிசிட்டி என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் இதுவொரு சானல் ப்ரமோ என்று பின்னர் தெரிந்தது. பிப்ரவரி 19-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கும் கலர்ஸ் சானலின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை’ எனும் சீரியலுக்கான விளம்பரம்தான் அது. கோலிவுட்டின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலரான ஆர்யாவுக்கு நிறைய விண்ணப்பங்கள் வந்து குவிந்தன.

நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக விண்ணப்பித்த பெண்களில் 16 பேரை தேர்ந்தெடுத்துள்ளது கலர்ஸ் சானல். அவர்கள் தயாரிக்கவிருக்கும் சீரியலில் ஆர்யாவுடன் இந்த 16 பெண்களும் நடிக்கவிருக்கிறார்களாம். வரும் பிப்ரவரி 19-ம் தேதி முதல் கலர்ஸ் டிவியில் இத்தொடர் ஒளிபரப்பாகும். வழக்கமாக இருக்கும் சீரியல்கள் போல் இல்லாமல், தரமான கதையம்சம் கொண்ட சீரியல்களை தயாரிக்க இந்தச் சானல் முடிவெடுத்துள்ளது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
சீரியலில் தன்னுடன் நடிக்கவிருக்கும் அந்த 16 பெண்களில் ஒருவரைத்தான் ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை. நடிகர் ஆர்யா தற்போது ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வரும் கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


