விஜய் ஆண்டனி நடிப்பில் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை ஆகிய படங்கள் பெரிதும் கவனம் பெற்றன. இவற்றைத் தொடர்ந்து சயின்ஸ் திரில்லர் இன வகைமையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளி எனும் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக அவரது மனைவி ஃபாத்திமா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். தற்போது ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இயக்குநர் ராஜமௌலியின் முன்னாள் உதவியாளர் கணேஷா இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஸ்ரீகாந்தை வைத்து ‘நம்பியார்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். திமிர் புடிச்சவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியது.

சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் துவங்கிய விஜய் ஆண்டனி, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெருகேறி வருகிறார். இந்நிலையில் திமிரு புடிச்சவன் படத்தில் முதல் முறையாக போலீஸாக நடிக்கவிருக்கிறார் விஜய் ஆண்டனி. இதற்கென மீசை மற்றும் கெட்டப்புக்களை மாற்றி வித்தியாசமான லுக்கில் வலம் வருகிறார்.

இப்படத்தில் இடம்பெறவுள்ள சிறப்பான சண்டைக் காட்சிகளில் மிரள வைக்க சிலம்பம் கற்று வருகிறாராம். இது வழக்கமாக வரும் போலீஸ் திருடன் கதையல்லாமல், மைண்ட் கேம் கூறுகளை உள்ளடக்கி, வித்தியாசமான கோணத்தில் கதையை உருவாக்கியிருக்கிறாராம் இயக்குநர் கணேஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


