காற்று வெளியிடைக்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது படத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்.

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கின்றது. தலைப்பு இன்னும் முடிவாத நிலையில், இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.

மணி ரத்னத்தின் முந்தைய படமான காற்று வெளியிடையில் கதாநாயகியாக நடித்த அதிதி ராவ் அண்மையில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து அதிதி கூறியது, ‘மணி சார் படத்தில் மீண்டும் நடிக்கிறேன். காற்று வெளியிடை படத்தில் நடித்தபோது நிறைய கற்றுக்கொண்டேன். இப்போது மேலும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தமுறை தமிழில் நானே சொந்தக் குரல் பேச முடிவெடுத்துள்ளேன்’ என்றார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த ஃபகத் ஃபாசில் படத்திலிருந்து விலகப் போவதாக கோலிவுட் வட்டாரத்திலிருந்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. தேதி பிரச்னைகளால் இம்முடிவை ஃபகத் எடுத்துள்ளார் என்றும் தெரிகிறது. ஆனால் படக்குழுவினரிடமிருந்து இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. ஃபகத்திற்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதும் முடிவாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


