டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரை வீரனை அருந்ததியராகவே காட்டுவதில் யாருக்கென்ன நஷ்டம்?!

அருந்ததியர்களுக்கு வீரம் இருக்கக்கூடாது? அல்லது அருந்ததியர்கள் வீரமானவர்களாக இருக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:01 pm

சரோஜினி

இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் மேற்கண்ட கேள்வியை எழுப்பி இருந்தார். தமிழ் நாட்டார் கதைகளில் ஒன்றான மதுரை வீரன் கதையைப்
பொருத்தவரை அவர் வளர்ப்பால் மட்டுமே அருந்ததியராகக் காட்டப்பட்டிருப்பார். பிறப்பால் அவரொரு அரசகுமாரனென்று நாட்டார் இலக்கியங்கள் இதுவரை சித்தரித்து வந்திருக்கின்றன. இதை நிஜமென்று நம்பக்கூடிய நிலையில் தான் நாம் இன்று வரை இருந்து வருகிறோம். இது பொய். மதுரை வீரன் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்து கொண்டு வீரனாக இருப்பதில் கலைத்துறையைச் சார்ந்த ஆதிக்க ஜாதியினருக்கு என்ன நஷ்டம்? அவரை ஏன் அரச குமாரனாகப் பிறந்து அருந்ததியப் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டவராக மட்டுமே காட்டியாக வேண்டிய நிர்பந்தம் என்ன? அருந்ததியர்களுக்கு வீரம் இருக்கக்கூடாது? அல்லது அருந்ததியர்கள் வீரமானவர்களாக இருக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். நியாயமான கேள்வி தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.