டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அம்பானியின் ‘மகாபாரதத்தில்’ முக்கிய வேடத்தில் பாகுபலி! அழைப்பு விடுத்தார் அமீர்கான்!

முகேஷ் அம்பானியின் ‘மகாபாரதத்தில்’ அமீர்கான் ஏற்று நடிக்கவிருப்பது ஸ்ரீகிருஷ்ணன் கதாபாத்திரம் என்று தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அது மட்டுமல்ல...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:38 pm

சரோஜினி

1000 கோடி ரூபாய் செலவில் முகேஷ் அம்பானி தயாரிக்கவிருக்கும் ‘மகாபாரதம்’ பன்மொழித்திரைப்படத்தில் முக முக்கியமான கதாபாத்திரமொன்றில் நடிக்க பாகுபலி பிரபாஸுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் இந்தி நடிகர் அமீர்கான். தற்போது தனது ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ திரைப்படப் பணிகளை முடிக்கும் தறுவாயில் இருக்கும் அமீர்கான். அத்திரைப்படப் பணிகள் முடிந்ததும் அடுத்தபடியாக முகேஷ் அம்பானியின் தயாரிப்பில் துவக்கப்படவிருக்கும் ‘மகாபாரதம்’ திரைப்படப் பணிகளில் முழு வீச்சில் இறங்கவிருப்பதாக அமீர்கானின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் தன்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரங்கள் என இருவரைச் சுட்டிக்காட்டியிருந்தார் அமீர்கான். அதில் ஒருவர் யாசோதையின் கிருஷ்ணன், மற்றொருவர் ராதேயனான கர்ணன். இந்த இரண்டு கதாபாத்திரங்களில் எதை அளித்தாலும் ஏற்று நடிக்கத் தனக்குச் சம்மதம் தான் என முன்பே தனது நேர்காணலொன்றில் வெளிப்படையாகக் கூறியிருந்தார் அமீர்கான்.

இதோ இப்போது முகேஷ் அம்பானியின் ‘மகாபாரதத்தில்’ அமீர்கான் ஏற்று நடிக்கவிருப்பது ஸ்ரீகிருஷ்ணன் கதாபாத்திரம் என்று தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அது மட்டுமல்ல... மகாபாரதத்தில் மற்றெல்லா கதாபாத்திரங்களைக் காட்டிலும் பிரசித்தி பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்றான அர்ஜூனன் கதாபாத்திரத்தில் நடிக்க பாகுபலி பிரபாஸைப் பரிந்துரைத்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இவர்களைத் தவிர இத்திரைப்படத்தில் மிக மிக முக்கியமான திரெளபதி வேடத்தில் நடிக்கவிருப்பது பத்மாவத் திரைப்படப் புகழ் தீபிகா படுகோன் என்று கூறப்படுகிறது முதலில் இத்திரைப்படம் கோரும் நேரம் மற்றும் பொருட் செலவை தம்மால் தாங்க இயலாது, மேலும் மக்கள் நன்கறிந்ததோர் இதிகாசத்தைப் படமாக்கும் போது அதற்கு பல கட்ட ஆராய்ச்சிகள் தேவை எனக்கருதி இத்திரைப்பட நோக்கத்தையே கைவிட்டார் அமீர்கான் எனக்கூறப்பட்டது. ஆயினும் தற்போது தனது ’தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் திரைப்பட வேலைகள் முடியும் பட்சத்தில் இருப்பதால் அடுத்தகட்டமாக அம்பானியின் ‘மகாபாரதம்’ திரைப்படத்திற்கான முன்னேற்பாடுகளில் ஏற்கனவே இறங்கி விட்டார் அமீர்கான் என்று பாலிவுட் பட்சி கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.