பொதுவாக நடிகைகள் தங்களது திருமணத்தைத் தள்ளிப் போடுவார்கள். காரணம் அதன்பின் அவர்களது மார்கெட் என்பது சந்தேக்கத்துக்குரியதுதான். ஆனால் திருமணத்துக்கு பின்னரும் தனக்கென தனி ரசிகர்களை தக்க வைத்துள்ளார் நடிகை சமந்தா. டோலிவுட் மற்றும் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் நாயகி இவர். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் பெரும் வெற்றி பெற்றது. மே 9-ம் தேதி மகாநடி, நடிகையர் திலகம் ஆகிய படங்களும், அதே மாதம் இரும்புத் திரையும் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படங்களிலும் நடித்து வருகிறார்.

தனது வெற்றியின் காரணமாக சமந்தா கூறுவது, 'சொந்த வாழ்வும் சரி சினிமா வாழ்க்கையில் சரி இரண்டிலும் எனக்கு நிறைவான மகிழ்ச்சி. கணவர் மற்றும் குடும்பத்தினர் என் சுதந்திரத்தை மதிக்கின்றனர். அதனால் தான் திருமணத்துக்கு பிறகும் என்னால் தொடர்ந்து நடிக்க முடிகிறது.

அவர்கள் ஆதரவினால்தான் சினிமாவில் தொடர்ந்து சாதிக்க முடிகிறது. நான் நடித்த படங்களின் வெற்றியை கொண்டாட முடிகிறது. சமீபத்தில் வெளியான ரங்கஸ்தலம் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது' என்றார்.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 28) சமந்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது, அப்போது யூ டர்ன் படத்திற்கான படப்பிடிப்பில் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சமந்தா கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது.

இந்த வருடப் பிறந்த நாளில் சமந்தாவிற்கு மூன்று கேக்குகள் பரிசாக வந்துள்ளன.

படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய பின் தில்லிக்குச் சென்றுள்ளார். அவருக்கு பல தெலுங்கு, தமிழ் நடிகர்கள், நடிகைகள் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்தனர். யூ டர்ன் படப்பிடிப்புக் குழுவினர் அவருக்காக கேக் வெட்டச் செய்து பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள். யூ டர்ன் படத்தின் இயக்குனர் பவன்குமார் மற்றும் நடிகர் ஆதி ஆகியோர் சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொடக்குறிச்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: இளம் வாக்காளா்கள் வாக்களிக்க ஆா்வம்

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


