சில நாட்களுக்கு முன்னர் வலைத்தளங்களில் பிரதமர் மோடி ரயில் நிலையத்தில் காத்திருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. ஆனால் அது மோடியின் படமல்ல மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டது. தற்போது அந்த புகைப்படத்தைப் பற்றிய தகவல்களும், அதில் பாரதப் பிரதமர் மோடியைப் போலவே இருப்பவர் யார் என்ற உண்மை வெளிவந்துள்ளது.

அவர் பெயர் எம்.பி.ராமச்சந்திரன். கன்னட படமான 'ஸ்டேட்மென்ட் 8/11' என்ற படத்தில் பிரதமர் மோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று காட்சிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியாக தோன்றுகிறார் ராமச்சந்திரன். ராமந்திரன் லுக்ஸ் அப்படியே பிரதமர் மோடியைப் போலவே உள்ளது என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அப்பி பிரசாத் திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்தை வினு கே.ஹெச் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டிலுக்கான காரணம் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மோடி அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு திட்டம்தான் என்றனர் படக்குழுவினர்.
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்ட நிலையில் மே மாதம் ரிலீஸ் ஆகிறது. இதுபோன்ற காத்திரமான படைப்புக்களுக்கான எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ளதும், அரசியல் சம்பவம் ஒன்றினை மையமாகக் கொண்டு ஒரு படம் வெளிவருவதும் பாராட்டத்த்தக்கது என்று நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொடக்குறிச்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: இளம் வாக்காளா்கள் வாக்களிக்க ஆா்வம்

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


