2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பவர் பாலிவுட்டில் நடிகர் அக்ஷய் குமார். ஷங்கர் இயக்கிய இப்படத்தின் எடிட்டிங் வேலைகள் நடந்து வருகின்றது. விரைவில் 2.0 ரிலீஸ் ஆகும். அக்ஷய் குமாரின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பேட்மேன் ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தது.

தற்போது 'கேசரி' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் அக்ஷய். அனுராக் சிங் இயக்கும் இப்படத்தில் அக்ஷய் குமாரின் ஜோடியாக பர்னீதா சோப்ரா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பைக்கு 200 கி.மீ தள்ளியுள்ள வய் (Wai) என்ற இடத்தில் நடந்து வருகிறது. 1897-ம் ஆண்டு நடந்த சரகாரி போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் சண்டை காட்சியொன்றின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்னல் வேகத்தில் தீ பரவியதில் பல லட்சம் ரூபாய் செலவழித்துப் போடப்பட்டிருந்த பிரம்மாண்ட செட் தீக்கிரையானது. தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக படக் குழுவினர் எவ்வித காயமின்றி தப்பியுள்ளனர். அக்ஷய் குமார் தனது பகுதி முடிந்தபடியால் ஏற்கனவே கிளம்பிவிட்டார். இந்த தீ விபத்தால் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஹோலி தினத்தில் வெளியாகும் என்கின்றனர் படக்குழுவினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


