கடந்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான பாகுபலி 2 திரைப்படம் இந்தியாவில் ஈட்டிய வெற்றி இந்திய திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா பாட்டியா, ரம்யாகிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வெளியான அத்திரைப்படம் இன்றளவும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகும் வண்ணம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்த இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல சீனாவிலும் கூட படம் மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பாகுபலி படக்குழுவினருக்கு உண்டு. படம் சென்சார் முடிந்து மார்ச் மாதம் தான் அப்படத்தை சீனாவில் வெளியிடுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதோ அடுத்த மாதம் வெளியீடுக்குத் தயார்நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.