முதன்முறையாக மலையாளப் படத்தில் நடிக்கவிருக்கிறார் அனுஷ்கா!
அனுஷ்கா முதல் முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


அனுஷ்கா முதல் முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘பாகுபலி’ வெற்றிக்குப் பின் பாகமதியும் சிறப்பாக ஓடவே அனுஷ்காவின் திரை வாழ்க்கை கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி இடத்தில் தொடர்ந்து வருகிறது.
தற்போது அனுஷ்கா நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை மல்லுவுட் இயக்குநர் சரத் சந்திப் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது. மேலும் இப்படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்கிறது அனுஷ்கா தரப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...