சமூகத்தில் சினிமாவின் ஆழமான தாக்கத்தைப் பற்றி நாம் சரியாகப் புரிந்து கொள்ள மறுக்கிறோம். சினிமா, சாதாரண ரசிகர்களின் மனதில் ஏற்படுத்திச் செல்லும் தாக்கத்தை உணர்ந்தவர்களாக சினிமாக்காரர்கள் இருக்க வேண்டும் என்பது தான் என்னைப் போன்றவர்களின் விருப்பம். இதை பெரிய பட அதிபர்கள், மற்றும் பெரிய ஹீரோக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய படங்களில், அவசியமற்று, போகிற போக்கில் புகைபிடிப்பதாக காட்சிகள் வைக்கப் பட்டிருப்பின் அத்தகைய காட்சிகளில் நடிக்க பெரிய ஹீரோக்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் மறுப்புத் தெரிவிக்க வேண்டும். புகைப்பதையும், குடிப்பதையும் பற்றி மட்டுமே படமெடுக்கப் போவதாக இருந்தால், அந்தப் படத்தின் ஹீரோ, குடிப்பதாகவோ, புகைப்பதாகவோ காட்டப்படுவதில் ஏதாவது அர்த்தமிருக்கலாம். ஆனால் பிற படங்களில் அனாவசியமாக அத்தகைய காட்சிகளை வைப்பது சமூகப் பொறுப்புணர்வு ஆகாது!