டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

‘கட்டப்பா பிரியாணி, தேவஸேனா பரோட்டா’: ஜி.எஸ்.டி சேர்த்து பாகுபலி விருந்தின் விலை எவ்வளவு தெரியுமா?

பாகுபலி புடவை, பாகுபலி பட்டாசு, பாகுபலி பை, பாகுபலி குடை என வரிசையில் இப்போது பாகுபலி விருந்தும் இணைந்துள்ளது

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:59 pm

DIN

ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்து இந்தியா முழுவதிலும் பல சாதனைகளை படைத்த படம் பாகுபலி. வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் இந்தப் படம் கவர்ந்தது. பாகுபலி புடவை, பாகுபலி பட்டாசு, பாகுபலி பை, பாகுபலி குடை என வரிசையில் இப்போது பாகுபலி விருந்தும் இணைந்துள்ளது. ஆம், புனேவில் உள்ள ‘ஹவுஸ் ஆஃப் பராத்தா’ என்னும் கடையில் இந்த ‘பாகுபலி தாலி’ அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

வட இந்திய உணவுப் பொருளான பரோட்டாவில் பல ரகங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. முக்கியமாக ‘கட்டப்பா பிரியாணி’, ‘தேவஸேனா பரோட்டா’, ‘பல்வாள்தேவா லஸி’, சிவகாமி ஷாஹி பாக்வான் மற்றும் பெரிய ‘பாகுபலி பரோட்டா’ போன்ற பல உணவு வகைகள் இதில் இருக்கின்றன. நடுவில் பீட்ஸாவில் போல் வைக்கப்பட்டு இருக்கும் இந்த பாகுபலி பரோட்டாவின் மேல் சீஸ் மற்றும் வெண்ணெய் தூவிப் பார்ப்பதற்கே மிகவும் சுவையாக இருக்கிறது. ஆனால் இந்த விருந்தை ஒருவரால் நிச்சயம் தனியே சாப்பிட்டு முடிக்க முடியாது. குறைந்தது 5 நபராவது ஒரு பிளேட் பாகுபலி விருந்தை வயிறு முட்டச் சாப்பிடலாம். ஜி.எஸ்.டி எல்லாம் சேர்த்து ஒரு பிளேட்டின் விலை ரூ.1,700-ஆம். 

YouTube video thumbnail

ஒரு முறை பாகுபலி நாயகன் பிரபாஸை பற்றி இயக்குநர் ராஜமௌலி கூறுகையில் “பிரபாஸ் தனி ஒருவராக 10-15 பிளேட் பிரியாணியை கூடச் சாப்பிடுவார், அதுவும் வகை வகையாக. பிரியாணியில் இத்தனை வகை இருப்பதாகக் கூட உங்களுக்குத் தெரியாது, அத்தனை ரகங்களில் பிரியாணியை சாப்பிடுவார்” என்று குறிப்பிட்டார், அப்படி பார்த்தால் ஒருவேளை பிரபாஸால் இந்த பாகுபலி விருந்தை முழுவதுமாக தனியாக காலி செய்ய முடியும் என்றுதான் தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.