ஆனால் சமீபத்தில், என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரமான அந்தத் திரைப்படத்தில், என் டி ஆர் வேடத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தான் நடிக்கவிருக்கிறார் என டோலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது அந்தச் செய்திகள் எதுவும் உண்மையில்லை என ராம்கோபால் வர்மா அறிவித்திருக்கிறார். ‘லக்ஷ்மியின் என் டி ஆர்’ திரைப்படத்தின் மையக்கதை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களால் என் டி ஆர் என அன்பொழுக அழைக்கப் படும் பழம்பெரும் நடிகரும், முன்னாள் ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வருமான நந்தமூரி தாரக ராமாராவின் வாழ்வில் அவரது இரண்டாவது மனைவியான லக்ஷ்மி பார்வதியின் வருகையைத் தொடர்ந்து அவரது அரசியல் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.