/

நரகாசூரன் திரைப்பட 'டீஸர்' வெளியீடு

அரவிந்த் சாமி நடித்துள்ள நரகாசூரன் படத்தின் டீஸர் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:12 pm

Raghavendran

சமீபத்திய வரவுகளில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பரவலான வரவேற்பைப் பெற்ற படம் 'துருவங்கள் பதினாறு'. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன், நம்பிக்கைக்குரிய இயக்குநர்களின் வரிசையில் வைத்துப் பார்க்கப்படுகிறார். 

இவரின் அடுத்த படைப்பாக உருவாகவுள்ள படம் "நரகாசூரன்". "துருவங்கள் பதினாறு' படத்துக்காக முதன் முதலில் அரவிந்த் சாமியைத்தான் கார்த்திக் நரேன் அணுகினார். ஆனால் அவரால் அப்போது அப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. 

இதனால் இப்போது இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். ஸ்ரேயா சரண், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். 

முதலில் இப்படத்தில் ஒப்பந்தமான நாக சைதன்யா விலகவே, அவருக்குப் பதிலாக சந்தீப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2018-ல் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீஸர் சனிக்கிழமை வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று, இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.