/

மந்திராலயம் சென்றார் ரஜினி! (படங்கள்)

மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி கோயிலுக்குச் சென்ற ரஜினி, கோயில் மடாதிபதியிடம் ஆசி பெற்றார்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:10 pm

எழில்

ஆந்திராவில் உள்ள மந்திராலயத்துக்கு ரஜினி இன்று சென்றார். அங்குள்ள ராகவேந்திர சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். 

ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தின் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊர், மந்திராலயம். இங்கு, ராகவேந்திர சுவாமி ஆலயம் உள்ளது. 

இந்நிலையில், தனது ஆன்மீகப் பயணத்தின் ஒரு பகுதியாக மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி கோயிலுக்குச் சென்றார் ரஜினி. கோயிலில் மேலாடையின்றி தரிசனம் செய்த ரஜினி, ராகவேந்திரா கோயில் மடாதிபதியிடம் ஆசி பெற்றார்.

இதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.