டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பிரபல ஹாலிவுட் நடிகையாக இருந்தாலும் இந்தியாவுக்கு வந்தால் என்ன நடக்கும்?

பிரபல ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி நான்கு கடந்த 8-ம் தேதி கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:08 pm

உமாகல்யாணி

பிரபல ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி கடந்த 8-ம் தேதி கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்துள்ளார். சிகிச்சை முடிந்த பின்னர் தனது நான்கு நண்பர்களுடன் ஆழப்புழா உள்ளிட்ட கேரளாவின் சில ஊர்களுக்கு சுற்றுலா சென்றார். அதன் பின் மும்பைக்கு பறந்தார்.

கடற்கரை முதல் கோவில்கள் வரை அங்கும் பல இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவரது நண்பர், ‘உங்களை அச்சுறுத்துவதற்காகச் சொல்லவில்லை. எதற்கும் கவனமாக இருக்கவும். இந்தியாவில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவதுடன் கொன்றும் விடுவார்கள். கவனமாக இருங்கள்’ என்று அறிவுரை கூறினார்.

Story image

இதனால் தனது நிகழ்ச்சி நிரலை ஒருவருக்கும் சொல்லாமல் ஹாலே பெர்ரி தனது  பயணத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறார். எங்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார் என்பதையும், எதற்காக சிகிச்சையை மேற்கொண்டார் என்பதைப் பற்றியும் பெர்ரி ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை. 

Story image

எக்ஸ்-மென், டை அனதர் டே, மான்ஸ்டர்’ஸ் பால், ரோபோ, டார்க் டைட் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் ஹாலே பெர்ரி. மாஸ்டர்’ஸ் பால் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2002-ம் ஆண்டில் ஆஸ்கர் விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.