தான் நடிக்கும் திரைப்படங்களில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடையே கோலகலமான வரவேற்பைப் பெற வேண்டும் என்ற ஆசை எல்லா ஆக்ஷன் நடிகர்களுக்கும் இருக்கும். ஆக்ஷன் திரைப்படங்களில் பல ஹீரோக்கள் ஆர்வம் காட்டினாலும் சிலருக்கு மட்டுமே அவை வெகு கச்சிதமாக அமைந்து பெயர் வாங்கித் தரக்கூடும். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அர்ஜூன், எனப் பல ஹீரோக்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆக்ஷன் திரைப்படங்களில் கொடி கட்டிப் பறந்திருந்தாலும் ஆக்ஷன் திரைப்படங்கள் என்றாலே இன்றும் ரசிகர்களது கவனத்துக்கு சட்டென்று வரக்கூடியவர்கள் அக்ஷன் கிங் அர்ஜூனும், விஜயகாந்தும் தான். அந்த வகையில் ஆக்ஷன் காட்சிகளின் மீது அந்த நடிகர்களுக்கு இருந்த தனிப்பட்ட கவனமும், ஆர்வமுமே அதற்கொரு காரணம் எனலாம்.