டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நம்பர் 1 நடிகை யார் தெரியுமா?

கனவுத் தொழிற்சாலை எனக் கூறப்படும் சினிமாவால் மக்கள் எப்போதும் ஈர்க்கப்பட்டே வருகின்றனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:05 pm

உமாகல்யாணி

கனவுத் தொழிற்சாலை எனக் கூறப்படும் சினிமாவால் மக்கள் எப்போதும் ஈர்க்கப்பட்டே வருகின்றனர். மற்றத் துறையில் சாதித்தவர்களைவிட சினிமாவில் முகம் காட்டியவர்களின் புகழ் மிக அதிகமாக வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஏனெனில் ஷோ-பிஸ் என்று அழைக்கப்படும் சினிமாவில் கவர்ச்சியும் பளபளப்பும் தான் காரணம். அவ்வகையில் திரையில் மின்னும்  தமது விருப்பத்துக்குரிய நடிகர்களைப் பற்றிய செய்திகளையும், அவர்களின் அடுத்த படங்களைக் குறித்த தகவல்களையும், அவர்கள் வாங்கும் விருதுகளை பாராட்டியும் அந்தந்த நடிகர்களின் ஃபேன் பேஸ் (Fan Base) தீவிரமாகச்  செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் அத்தகைய ரசிகர்களின் கணிப்பின் படி தென் இந்திய நடிகையருள் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் யாரென கணித்து டாப் 5 பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். 

Story image

1. ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் இசைத் துறையில் சாதிக்க விரும்பி நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்தவர். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டாலிவுட் என பிற மொழிகளிலும் நடித்துப் புகழ் பெற்றவர். சமீபத்தில் சாண்டல் வுட் சர்ச்சையில் சிக்கினாலும் அப்பா கமல்ஹாசனைப் போலவே துணிச்சலானவர். எதிர்வரும் விமரிசனங்களை புறங்கையால் தள்ளிவிட்ட படி வெற்றி நடை போடும் ஸ்ருதிஹாசனின் சம்பளம் ஒரு கோடி என்கிறார்கள். 

Story image

2. காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலின் கிராஃப் மிதமாக வளர்ந்து சூடு பிடித்து தற்போது முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் தென்னிந்திய நடிகை என்ற பெயர் எடுத்துவிட்டார். தற்போது காஜல் அகர்வாலின் கால்ஷீட் வேண்டுமெனில் இரண்டு கோடி ரூபாயை முதலில் பட்ஜெட்டில் ஒதுக்கிய பின்னரே ஒப்பந்தம் செய்ய முடியும். சில படங்களில் இரண்டு கோடிக்கு மேலாகவும் சம்பளம் பெறுகிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Story image

3. அனுஷ்கா ஷெட்டி

ஸ்வீட்டி என்ற இயற்பெயரால் செல்லமாக அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டி கோலிவுட் டோலிவுட் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படும் நடிகை. அழகும் நடிப்புத் திறனும் கொண்ட ஒருசில நடிகையருள் அனுஷ்கா முக்கியமானவர். மேலும் அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையை பாகுபலிக்கு முன் பாகுபலிக்குப் பின் என்ற இரண்டாகப் பிரிக்கலாம். அப்படி பிரிக்கையில் பா.பி அவர் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளம் இரண்டு கோடியிலிருந்து நான்கு கோடி வரை என்கிறார்கள். அனுஷ்காவின் அடுத்த படம் பாகமதிக்கு பின் மேலும் சில கோடிகள் வரை அவரது சம்பளத்தில் ஏற்றம் இருக்கும் என்கிறது டோலிவுட் வட்டாரம்.

Story image

4. சமந்தா

சமந்தா ரூத் பிரபுவாக இருந்த சமந்தா பிரபல டோலிவுட் நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்தபின்னர் சமந்தா அகினேனி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அழகும் திறமையும் உள்ள சமந்தா  பல விருதுகளுக்கும் சொந்தக்காரர். தற்போது ஒரு படத்தில் நடிக்க இரண்டு கோடி சம்பளம் பெற்று வருகிறார் சமந்தா.

Story image

5. ரகுல் ப்ரீத் சிங்

அழகுச் சிரிப்பால் டோலிவுட் மற்றும் கோலிவுட்டை நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே கட்டிப் போட்டுவிட்டார் ரகுல் ப்ரீத் சிங்.  சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் அதிக ஆர்வத்துடன் பதிவுகள் எழுதி ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர் ரகுல். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் ரசிகர்களின் பாராட்டுதல்களை அவருக்குப் பெற்றுத் தந்தது. ரகுல் ப்ரீத் சிங்கின் சம்பளம் ஐம்பதிலிருந்து தொன்ணூறு லட்சமாம். விரைவில் ஒரு கோடியைத் தாண்டுவதே லட்சியம் என்கிறது ரகுல் தரப்பு.

Story image

அது சரி நம்பர் 1 நடிகை இதில் யார் என்ற கேள்வி எழுகிறதா? சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நம்பர் 1 என்பது ஒரு மாயையான நிரந்தரமற்ற இடம்.  பட்டியல்களில் கவனம் செலுத்தாமல், உழைப்புக்கும் தான் சார்ந்த தொழிலின் மீதான அக்கறையுடன் செயல்படுபவர்களே நம்பர் 1 இடத்தில் காலம்தோறும் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்து வருகின்றனர். உண்மைதானே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.