சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் "சங்கமித்ரா'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 24' படத்துக்காக தேசிய விருது வென்ற திரு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் உருவாகவுள்ளது. இப்படத்துக்கு இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பிரதான கதாநாயகியாக ஷ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தவிர்க்கமுடியாத காரணங்களால், சங்கமித்ரா படத்தில் ஷ்ருதி ஹாசனுடன் பணியாற்ற முடியவில்லை என்று அறிவித்துள்ளது. ஷ்ருதி ஹாசனைக் கொண்டு முதல் பார்வை சுவரொட்டிகள் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் மே மாதம் திரைப்பட விழா நடைபெறும். இதில் பல்வேறு நாடுகளின் சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டு சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. சங்கமித்ரா-வின் தொடக்க விழா கேன்ஸ் படவிழாவில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். மே 18 இரவு அன்று நடைபெற்ற தொடக்கவிழாவில் பிரபலங்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்பட்டது. சங்கமித்ரா-வின் தொடக்கவிழாவுக்கு வருகை தந்த ஏ.ஆர். ரஹ்மான், ஷ்ருதி ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆகஸ்ட் முதல் சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு படப்பிடிப்பைப் பாதிக்கும் என எண்ணப்படுகிறது. விரைவில் படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


