இன்றைய இளம் நடிகைகளுக்கு இது சாத்தியமேயில்லை. தாய்மொழியில் நடிக்கும்போது கூட இரவல் குரலைப் பயன்படுத்தும் நடிகைகள் பலர் உள்ளார்கள். ஆனால் மாம் படத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவி, படம் வெளியாகவுள்ள நான்கு மொழிகளிலும் தானே டப்பிங் பேச முடிவெடுத்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் 300-வது படம் - மாம். 2017 அவருடைய திரையுலக வாழ்வின் 50-வது வருடம். 1967-ம் வருடம் ஜூலை 7-ம் தேதி துணைவன் படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமானார். அதே தினத்தில் மாம் படமும் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான்.
ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியாகும் மாம் படம், ஹிந்தியில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. இந்த நான்குப் பதிப்புக்கும் சொந்தக் குரலில் பேச முடிவெடுத்துள்ளார் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவி 2012-ல் வெளியான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
திமுக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: சு. வெங்கடேசன் எம்.பி.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


