சாம் வர்திங்டன் நடிக்கும் ஹாலிவுட் படமான ‘ஹண்டர்ஸ் ப்ரேயர்’ இந்தியத் திரையரங்குகளில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தப் படம் கெவின் விக்னால் எழுதிய நாவலை மையமாக வைத்து திரையாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார் கதாநாயகன் சாம் வர்திங்டன். அசாசின் எனும் பணம் வாங்கி கொலை செய்யும் ஒரு மனிதனாக இப்படத்தில் அவர் நடித்துள்ளார். இத்திரைப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘ஆக்ஷன் படங்களைப் பொருத்தவரையில் துப்பாக்கியில் குறி வைப்பதும், சுடுவதும் ஓடுவதும் என பரபரப்புக்காக ஒரே மாதிரியான காட்சிகள் இருக்கும். உண்மையில் அந்த கதாபாத்திரத்தின் உணர்வு நிலைகளை சொல்லும் படங்களில் நடித்த அனுபவம் இதுவரை எனக்கு எற்பட்டதில்லை. ஆனால் இந்தப் படத்தைப் பொருத்தவரையில் நீங்கள் புதுவகையான ஒரு ஆக்ஷன் படத்தை பார்க்கப் போகிறீர்கள்’ என்றார்.
‘நல்ல த்ரில்லர் படங்கள் என்பவை பார்வையாளர்களை இமைக்காமல் பார்க்கச் செய்துவிடும். கதைநாயகன் அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதைத் தான் நானும் செய்ய விரும்புகிறேன். பார்வையாளர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களுடைய எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யவே திரைப்படங்களை எடுக்கப்படுகின்றன’ என்றார் இப்படத்தின் இயக்குனர் ஜொனாதன் மாஸ்டவ்.
Hunter's Prayer திரைக்கதையை எழுதியவர் ஜான் ப்ரன்காடோ, மிக்கேல் பெரிஸ், பால் லெய்டன் மற்றும் ஒரன் மூவர்மான். இதில் நடித்துள்ளவர்கள் ஆலன் லீச், ஏமி லாண்டேக்கர், மார்டின் காம்ப்ஸ்டன் மற்றும் வெரோனிகா எச்குயி ஆகியோர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


