/

அன்பே சிவம் 2, பஞ்சதந்திரம் 2: கமல் ஆர்வம்!

அன்பே சிவம் மற்றும் பஞ்சதந்திரம் படங்களின் இரண்டாம் பாகங்களில் நான் ஆர்வம் செலுத்தினேன் என கமல் பேட்டி

News image
Updated On :13 மே 2017, 10:04 am

அன்பே சிவம் மற்றும் பஞ்சதந்திரம் படங்களின் இரண்டாம் பாகங்களில் நான் ஆர்வம் செலுத்தினேன் என கமல் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: 

திரையுலகுக்குக் கிடைத்த முக்கியமான விஷயம் பாகுபலி படம். வர்த்தகரீதியாக நான் பேசுகிறேன். அதற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார்கள். ஆனால் இதனால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்றால் அந்தக் கருத்தைக் கொஞ்சம் ஒத்திவையுங்கள். நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் உள்ளது என்று சொல்வேன். நாம் சிறந்த கலாசாரத்தையும் சிறந்த படைப்புகளையும் கொண்டுள்ளோம் என்பதை பாகுபலி நிரூபித்துள்ளது. 

இன்று நானும் ரஜினியும் 2.0, விஸ்வரூபம் 2 என ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது குறித்து கேட்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன். 30 வருடங்களுக்கு முன்பு, கல்யாணராமன் படத்தில் இதைத் தொடங்கினேன். பஞ்சதந்திரம் படம் தயாரிப்பில் இருக்கும்போதே அதன் இரண்டாம் பாகம் எடுக்க நான் விரும்பினேன். பாகுபலியில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அதன் இரண்டாம் பாகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார்கள். இப்போது பாகுபலி படத்தின்மீது நம்பிக்கை வைப்பதுபோல அப்போது அன்பே சிவம், பஞ்சதந்திரம் படங்களை உருவாக்கியவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. இவ்விரு படங்களும் இன்னும் நீண்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.