டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சத்யம் திரையரங்கில் பார்த்த ஆங்கிலப் படங்களுக்கு நிகரான படைப்பு: பாகுபலி 2 குறித்து ஆர்ஜே பாலாஜி

சத்யம் திரையரங்கில் அல்லது ஸ்டார் மூவிஸில் ஹாலிவுட் படம் பார்க்கும்போது அதுபோன்ற படைப்புகளை இந்தியாவில் உருவாக்க முடியாது என்று...

News image
Updated On :9 மே 2017, 10:20 am

பாகுபலி 2 படம் பார்த்த நடிகர் ஆர்ஜே பாலாஜி, படத்தின் இயக்குநர் ராஜமெளலி மற்றும் அதன் குழுவினருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியதாவது:

ஆயிரம் கோடி ரூபாய் வசூலுக்கு வாழ்த்துகள். படம் பார்த்து வளர்ந்தவன் நான். சத்யம் திரையரங்கில் அல்லது ஸ்டார் மூவிஸில் ஹாலிவுட் படம் பார்க்கும்போது அதுபோன்ற படைப்புகளை இந்தியாவில் உருவாக்க முடியாது என்று எண்ணியிருந்தேன். சர்வதேசத் தரத்துக்குப் படம் உருவாக்க பல்வேறு காரணங்களைச் சொல்லிவந்தார்கள். அந்தளவுக்குச் செலவு செய்யமுடியாது, உலகளவிலான வர்த்தகம் இல்லை, தொழில்நுட்ப வசதிகள் இல்லையென. ஆனால் இப்போது நாம் காண்பது ஒரு வரலாற்றுச் சாதனை. இது ஒரு மனிதனின் கற்பனை. பாகுபலி படங்களின் மூலம் உலகுக்கு மட்டுமல்லாமல் இங்குள்ளவர்களுக்கும் நம்மால் என்ன செய்யமுடியும் என்று நிரூபித்ததற்காக. உங்களுடைய கனவு மற்றும் உங்கள் குழுவின் உழைப்பினால் ஆயிரம் கோடி வசூல் மட்டுமல்ல, உலகம் முழுக்க உள்ள மக்களிடமிருந்து அன்பு, மரியாதை, நம்பிக்கையைப் பெற்றுள்ளது. நமக்குள் பெருமிதத்தை உருவாக்கிய படைப்புக்காக உங்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.