டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தவறான புகைப்படத்தைப் பகிரவேண்டாம்: துல்கர் வேண்டுகோள்

தவறான புகைப்படத்தைப் பகிரவேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்...

News image
Updated On :9 மே 2017, 12:05 pm

மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மான், கடந்த வாரம் பெண் குழந்தைக்குத் தந்தை ஆனார். 

துல்கர் நடித்த காம்ரேட் இன் அமெரிக்கா படம் வெளியான அதேநாளில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துல்கரின் மனைவி அமல் சுஃபியாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இத்தகவலை மகிழ்ச்சியுடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் துல்கர். குழந்தை பிறந்த சமயத்தில் துல்கரின் தந்தையும் நடிகருமான மம்மூட்டி, தாய் சுல்ஃபாத், நஸ்ரியா நஸிம், விக்ரம் பிரபு ஆகியோர் மருத்துவமனையில் இருந்து அமலைக் கவனித்துக்கொண்டார்கள்.

துல்கர் - சென்னையைச் சேர்ந்த ஆர்கிடெக்ட் அமல் சுஃபியா ஆகிய இருவருக்கும் 2011 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. இப்போது முதல் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் துல்கர் சல்மானின் குழந்தை என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டது. இதுகுறித்து துல்கர் கூறியதாவது:

குழந்தையின் தவறான புகைப்படத்தைப் பகிரவேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்கவேண்டும் என விரும்புகிறேன். என்னால் முடிந்தவரை அனைத்தும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.