/

நயன்தாரா நடித்த டோரா படத்தின் 4 நிமிடக் காட்சிகள் வெளியீடு!

நாளை வெளியாகவுள்ள நயன்தாரா நடித்துள்ள டோரா படத்தின் 4 நிமிடக்காட்சிகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :30 மார்ச் 2017, 9:08 am

நாளை வெளியாகவுள்ள நயன்தாரா நடித்துள்ள டோரா படத்தின் 4 நிமிடக்காட்சிகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் "டோரா.' இப்படத்தை தாஸ் ராமசாமி எழுதி இயக்கியுள்ளார். தனக்கென தனித்துவம்மிக்க கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்த "அனாமிகா', "மாயா' போன்ற படங்களில் படத்தின் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ஹீரோக்கள் வந்து போனார்கள். ஆனால் "டோரா' படத்தைப் பொறுத்தவரை நயன்தாராவுக்கு ஜோடியாக காதலர் அல்லது கணவர் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஒரு கொலையும், அதைச் சுற்றிய சம்பவங்களும்தான் கதை. தம்பி ராமையா, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தை சற்குணம் சினிமாஸ் முதல் பிரதி முறையில் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளது. விவேக் - மெரிவின் இசையமைப்பில் உருவாகியுள்ளது இப்படம். நாளை டோரா வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் 4 நிமிடக் காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நாளை கவண் படமும் வெளிவருவதால் அப்படத்தைப் பார்க்கவே ரசிகர்கள் முன்னுரிமை அளிப்பார்கள். எனவே டோரா படத்தின் விளம்பர உத்திகளில் ஒன்றாக முழுக்க முழுக்க நயன்தாரா இடம்பெற்றுள்ள 4 நிமிடக் காட்சிகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.