/

ஜெயம் ரவி நடித்துள்ள வனமகன் பட டிரெய்லர்

விஜய் தயாரித்து இயக்கும் வனமகன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 மார்ச் 2017, 6:29 am

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் "பேராண்மை.' இப்படத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக நடித்திருந்த "ஜெயம்' ரவியின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. உடல் மொழி, கதாபாத்திர பொருத்தம் என எல்லா வகைகளிலும் அக்கதாபாத்திரத்தோடு பொருந்தியிருந்தார். விமர்சன ரீதியாகவும் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக நடிக்கிறார் "ஜெயம்' ரவி. விஜய் தயாரித்து இயக்கும் வனமகன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. "ஜெயம்' ரவி ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். திரு ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பழங்குடி இளைஞன் ஒருவனின் காதல், அரசியல், லட்சியம் எல்லாமும்தான் கதை என்கிறார் இயக்குநர் விஜய். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.