திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கங்கை அமரனின் பிரசாரத்துக்கு ஆதரவளிக்க மறுத்த யுவன் ஷங்கர் ராஜா!

தனது ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியதால் பிறகு அதை நீக்கிவிட்டார் வாசுகி பாஸ்கர்.

News image
Updated On :24 மார்ச் 2017, 5:32 am

ஆர்.கே. நகரில் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார் கங்கை அமரன். இதற்கு வாழ்த்து ட்வீட் வெளியிட்ட ஆடை வடிவமைப்பாளரும் இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி. பாஸ்கரின் மகளுமான வாசுகி பாஸ்கர், அந்த ட்வீட்டுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் டேக் செய்திருந்தார். அதில் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒருவர்.

ஆனால் இதற்கு உடனே மறுப்பு தெரிவித்துள்ளார் யுவன். வாசுகிக்கு அளித்த பதிலில், நான் இதை ஆதரிக்கவில்லை என்று ட்வீட் செய்தார். இதனால் சமூகவலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்லாமியராக மத மாற்றம் செய்துகொண்ட யுவன், பிஜேபி வேட்பாளராக உள்ள கங்கை அமரனுக்கு ஆதரவளிப்பது சரியாக இருக்காது என்பதால் அவர் இதுபோல பதில் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அது காரணமல்ல, இளையராஜா - எஸ்பிபி விவகாரத்தில் தன் தந்தையைக் கடுமையாகச் சாடியதால் இப்போது கங்கை அமரனுக்கு ஆதரவளிக்க யுவன் மறுத்துள்ளார் என்றும் இன்னொரு கருத்து உலவுகிறது. கங்கை அமரனின் பிரசாரத்துக்கு ஆதரவளிக்கவில்லை என்று மட்டுமே யுவன் கூறியுள்ளார். காரணத்தை இதுவரை கூறவில்லை.

தனது ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியதால் பிறகு அதை நீக்கிவிட்டார் வாசுகி பாஸ்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.