திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

100 மில்லியன்: யூடியூபில் உயரத்தைத் தொட்ட பாகுபலி 2

இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டதில்...

News image
Updated On :24 மார்ச் 2017, 10:59 am

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது.  இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்திய அளவில் வேறெந்த படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானதில்லை என்பதால் ஏப்ரல் 28 அன்று ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டதில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது.

நான்கு மொழிகளிலும் சேர்த்து  யூடியூப் இணையத்தளத்தில் 6.50 கோடி  (65 மில்லியன்) தடவை பாகுபலி 2 டிரெய்லர் பார்க்கப்பட்டபோது இந்திய சாதனையாக கருதப்பட்டது. இதுவரை வெளிவந்த எந்தவொரு இந்தியத் திரைப்படத்தின் டிரெய்லரும் இத்தகையை எண்ணிக்கையை எட்டியதில்லை. அதேபோல முதல் 24 மணி நேரத்தில் உலகளவில் அதிக தடவை பார்க்கப்பட்ட டிரெய்லர்கள் வரிசையில் 13-வது இடத்தைப் பிடித்தும் சாதனை செய்தது.

இந்நிலையில் யூடியூப் இணையத்தளத்தில் நான்கு மொழிகளிலும் சேர்த்து 100 மில்லியன் பார்வைகளை எட்டியது பாகுபலி 2 டிரெய்லர். முதல் நாளன்றே 50 மில்லியன் பார்வைகள் எண்ணிக்கையை எட்டிய பாகுபலி 2 தற்போது அடுத்த உயரமான 100 மில்லியன் பார்வைகளையும் (10 கோடி) தொட்டுள்ளது. இத்தகவல் பாகுபலி படக்குழுவினரை மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது. இயக்குநர் ராஜமெளலி முதல் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.