புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பாகுபலி 2 டிரெய்லருக்கு அதிவேக ஒரு கோடி பார்வைகள்! எந்த மொழியில் அதிகம்?

பாகுபலி 2 டிரெய்லர் வெளிவந்து சில மணி நேரங்களே ஆகியுள்ளன. அதற்குள் யூடியூப் இணையத்தளத்தில்...

News image
Updated On :16 மார்ச் 2017, 10:50 am

பாகுபலி 2 டிரெய்லர் வெளிவந்து சில மணி நேரங்களே ஆகியுள்ளன. அதற்குள் யூடியூப் இணையத்தளத்தில் கிட்டத்தட்ட 1.25 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

இன்றுகாலை முதல்முதலில் தெலுங்கு டிரெய்லரை வெளியிட்டார் இயக்குநர் ராஜமெளலி. அது மாலை 4 மணி வரை அதிகபட்சமாக 76.20 லட்சம் பார்வைகளை யூடியூப் இணையத்தளத்தில் பெற்றுள்ளது.

இதன்பிறகு அவர் ஹிந்தி டிரெய்லரை வெளியிடுவார் என்று எதிர்பார்த்த தருணத்தில் தமிழ் டிரெய்லரை வெளியிட்டார். அது மாலை 4 மணி வரை 8.95 லட்சம் பார்வைகளை யூடியூப் இணையத்தளத்தில்
பெற்றுள்ளது.

பிறகு மலையாள டிரெய்லரை வெளியிட்டார். அது அதே நேரக் கணக்கில் 2.72 லட்சம் பார்வைகளை யூடியூப் இணையத்தளத்தில் பெற்றுள்ளது.

கடைசியாக ஹிந்தி டிரெய்லரை வெளியிட்டார். அது 36.53 லட்சம் பார்வைகளை யூடியூப் இணையத்தளத்தில் பெற்றுள்ளது.

பாகுபலி 2 டிரெய்லர் நிலவரம்: (மாலை 4 மணி வரை)

தெலுங்கு: 7,620,795
ஹிந்தி: 3,653,443
தமிழ்: 895,215 
மலையாளம்: 272,996
மொத்தம்: 1,24,42,449

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.