நடிகை பாவனாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி திருச்சூரில் நேற்று நடைபெற்றது.
கன்னட தயாரிப்பாளர் நவீனைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்துவருகிறார் பாவனா. நவம்பர் 2014-ல் இருவரும் திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டியிருந்ததால் தற்போதுதான் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 16 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியரும் பங்கேற்றார்.

இந்நிலையில் பாவனா ஒரு பேட்டியில் கூறியதாவது: என் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தக்கூடாது என்பதற்காக ரகசியமாக நடத்தினேன். அதனால் இந்நிகழ்ச்சி என் வீட்டில் நடைபெற்றது. என் நெருங்கிய நண்பர்களைக்கூட நான் அழைக்கவில்லை. நிச்சயதார்த்தம் நடக்கிறது என்கிற தகவலை மட்டுமே சொன்னேன். என் திருமணம் நடக்கும்போது எல்லோருக்கும் சொல்லிக்கொள்ளலாம் என்றுள்ளேன். ஆனால் என் நிச்சயதார்த்த நிகழ்ச்சி வெளியே தெரிந்துவிட்டது. நவீனைக் கடந்த 5 வருடங்களாகத் தெரியும். என் முதல் கன்னடப் படமான ரோமியோவின் தயாரிப்பாளர் அவர். எங்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்; பக்தர்களுக்கு ஜூஸ், மோர் அளித்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!

லடாக்கில் 5 புதிய மாவட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

நீதிக் கதைகள்! கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


