இவன் தந்திரன், அதாகப்பட்டது மகாஜனங்களே, யானும் தீயவன், இவன் யாரென்று தெரிகிறதா, எவனவன், காதல் காலம், எங்கேயும் நான் இருப்பேன்...
இன்று வெளியாகியுள்ள ஏழு படங்கள் இவை. ஜூலை 1-க்குப் பிறகு வரிவிலக்கு கிடையாது என்பதால் அடித்துப்பிடித்து இன்று வெளியாகியுள்ளன.
சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி. இதுவரை நடைமுறையில் உள்ள மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்ளூர் வரிகள் ஆகிய பல்வேறு வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, சரக்கு-சேவை வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா டிக்கெட் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி விதிப்புக்குத் திரைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாளை முதல் என்ன விலைக்கு டிக்கெட்டை விற்பது என்று திரையரங்கு அதிபர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். தமிழக அரசிடமிருந்து சாதகமான பதில் எதுவும் வராததால் என்ன நிலை எடுப்பது என்கிற குழப்பத்தில் உள்ளார்கள். எனவே நாளை முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகளுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு விதமான கூட்டங்கள் நடப்பதால் அதன் முடிவில் ஒரு நிலை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இன்று மாலை டிக்கெட் விலை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குழப்பதால் இந்த ஏழு படங்களும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நாளை முன்பதிவு செய்வது குறித்து தெளிவான நிலை இல்லாததால் வசூலில் மிகவும் நஷ்டத்தைச் சந்திக்க உள்ளன. அதிலும் கெளதம் கார்த்திக், ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள இவன் தந்திரன் படத்துக்கு இதனால் இழப்புகள் அதிகமாக ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் ஜிஎஸ்டி தொடர்புடைய குழப்பங்கள் விரைவில் தீரவேண்டும் என்று இந்த ஏழு படங்களின் படக்குழுக்களும் இதுகுறித்த தகவல்களில் ஆர்வமாக உள்ளன.
எனினும் இன்று இரவுக்குள் முடிவுகள் எட்டப்படும். அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். அதன்பிறகு டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கப்படும் என்று திரையரங்கு அதிபர்கள் கூறியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


