திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களைக் குறித்தும், திரை உலகைப் பற்றியும் வெளிப்படையான கருத்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் தினமும் எழுதி, அடிக்கடி சர்ச்சகைகளில் சிக்கிக் கொள்பவர் ஆர் ஜி வி என பாலிவுட்டால் அழைக்கப்படும் ராம் கோபால் வர்மா.
தனது டிவிட்டர் பக்கத்தில் விநாயகரைப் பற்றி கிண்டலாக சில வரிகளை எழுதியுள்ளது பலருக்கு அதிர்ச்சி அளித்தது. வினாயகரைப் பற்றியும் அவரது உருவத்தைப் பற்றியும் கேலியாக ராம் கோபால் வர்மா எழுதியிருப்பது இந்து மதத்தை அவமதிப்பதாக இருந்தது. ராம் கோபால்வர்மாவின் கருத்தை எதிர்த்து இண்டஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனர் விவேக் ஷெட்டி என்பவர் மும்பய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்தேரியில் உள்ள மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்டரேட் கோர்ட் ராம் கோபால் வர்மாவுக்கு ஆகஸ்ட் 8-தேதிக்குள் ஆஜராகும்படி ஆணை விடுத்துள்ளது.
ராம் கோபால் வர்மாமைப் பொருத்தவரை இது அவருக்குப் புதிதல்ல. அடிக்கடி தனது டிவிட்டர் பக்கத்தில் முரண்பட்ட கருத்துக்களை பதிவிடும் வழக்கம் உடையவர். இதற்கு முன்னால் 2014-ல் மதங்களைப் பற்றி தனது கருத்தைச் சொல்லி கடும் கண்டனத்துக்கு உள்ளானார். கடவுளுக்கு சக்தி இருப்பது உண்மை என்றால் அவனை வணங்கும் மக்களை ஏன் தாக்குதலுக்கு உள்ளாக்கி வேடிக்கைப் பார்க்கிறான் போன்ற கருத்துக்களை தொடர் பதிவுகளாக தனது டிவிட்டரி வெளியிட்டார். மேலும் நான் கடவுளை கும்பிடுவதில்லை சாத்தானை கும்பிடுவேன் என்று பதிவிட்டிருந்தார்.
இந்து மதத்தையும், இந்துக் கடவுளரையும் தொடர்ந்து தன்னுடைய கேலிப் பேச்சுக்களால் அவமதிக்கும் ராம் கோபால் வர்மாவின் செயல் கண்டனத்துக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


