ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

முதல்வருக்குக் கடிதம் எழுதிய விஷாலை மறைமுகமாக விமரிசனம் செய்யும் இயக்குநர் சேரன்!

தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஷால் கடிதம் எழுதினார்... 

News image
Updated On :21 ஜூன் 2017, 9:10 am

தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஷால் கடிதம் எழுதினார். இதை இயக்குநர் சேரன் மறைமுகமாக விமரிசனம் செய்துள்ளார். 

நடிகர் விஷால், தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கி சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தாங்கள், தமிழக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.  உத்தரப் பிரதேசத்திலும், மகாராஷ்டிரத்திலும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதை அறிந்து பஞ்சாப் மாநில அரசும் கடன்களை ரத்து செய்துள்ளது. தமிழக விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வறுமையைப் போக்கும் விதத்தில் கடன்களை தள்ளுபடி செய்து, விவசாயிகளின் எதிர்காலத்தை தாங்கள் வளமாக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் விஷால் தெரிவித்தார்.

இதையடுத்து விஷாலின் கடிதத்தைச் சாடுவதுபோல இயக்குநர் சேரன் ட்விட்டரில் கூறியதாவது: 

ஆடு நனைகிறதென ஓநாய்கள் கவலைகொள்ளும். விவசாயிகள் பாவமென விவரமில்லாதோர் அறிக்கைவிடுவார்கள். அவர்களை முதலில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்யச்சொல்லுங்க. விவசாயம் நம் அத்தியாவசியத்தேவை என்பதை உணரும்போதே அது வளரும். வசதிக்கு கார், பங்களான்னு வச்சிருக்கோம்..சோத்துக்கு சொந்தபூமி வச்சிருக்கமா? என்று ட்விட்டரில் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.