ஜெயம் ரவி நடித்துள்ள வனமகன் படத்துக்குத் தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
பேராண்மை படத்துக்குப் பிறகு மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக வனமகன் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இவர் ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். விஜய் தயாரித்து இயக்கும் வனமகன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படம்.
வனமகன் படம் வருகிற வெள்ளியன்று வெளிவருகிறது. இதையடுத்து யு சான்றிதழ் பெற்ற இப்படத்துக்குத் தமிழக அரசு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சரக்கு-சேவை வரியான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி.), ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதுவரை நடைமுறையில் உள்ள மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்ளூர் வரிகள் ஆகிய பல்வேறு வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, சரக்கு-சேவை வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்த் திரையுலகுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை இந்த ஜிஎஸ்டியால் ரத்து செய்யப்படவுள்ளது. தமிழில் தலைப்பு, யு சான்றிதழ் உள்ளிட்ட அரசின் விதிமுறைகளைப் பின்பற்றும் தமிழ்ப் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு பல மாற்றங்கள் தமிழ்த் திரையுலகில் வரவுள்ளன.
இதனால் ஜூலை 1-க்கு முன்பு வெளியாகும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்கிற நிலையில் வனமகன் படம் தமிழக அரசிடமிருந்து வரிவிலக்கு பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


