திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அடுத்தடுத்து முடிக்க வேண்டிய படங்கள்! காதலுக்கும் வேலைக்கும் இடையில் சிக்கிய சமந்தா!

சமந்தா நாக சைதன்யாவின் திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சமந்தா நடித்து

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:02 am

உமாகல்யாணி

சமந்தா நாக சைதன்யாவின் திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சமந்தா நடித்து முடிக்க வேண்டிய படங்களுக்காக சென்னை திரும்பினார். புறப்படுவதற்கு முன்னர் காதலர் சைதன்யாவை இறுக அணைத்தபடியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மனம் உருகும் காதல் வசனங்களையும் பதிவு செய்துள்ளார். அதில் காதல், பிரிவு, பதற்றம் என கலவையான உணர்வுகளில் தவிப்பதாக கூறியிருக்கிறார். வேலை நெருக்கடியால் ஏற்பட்ட இந்தப் பிரிவு இந்த ஜோடியை அதுவும் சமந்தாவை அதிகமாகவே வாட்டியிருக்கிறது. ‘நான் ஏன் போகணுக்ங்கறதுக்கான மூன்று காரணங்களை சொல்லு. எனக்கு உடம்பு சரியில்லாமல் போகப் போகிறது என்று நினைக்கிறேன். இந்த ஃப்ளைட் கிளம்புமா? மழை வரும் என்று வானிலை அறிக்கை சொல்கிறது. நிஜமாகவா? ஏதாவது நடந்து நான் போகாமல் இருக்கக் கூடாதா? இப்படியெல்லாம் சமந்தாவை காதல் பிரிவு இன்ஸ்டாகிராமில் புலம்ப வைத்துள்ளது.

Story image

சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராமின் கூட்டணியில் ஒரு புதிய படத்தில் இன்று முதல் நடிக்க உள்ளார் சமந்தா. இதன் படப்பிடிப்பு ஒரு மாத காலம் வரை நீடிக்கும். தென்காசியில் தொடங்கவுள்ளது. இன்று துவங்கி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து முப்பது நாட்கள் தென்காசி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறவுள்ளது. அதற்குள் சைதன்யாவை மிஸ் செய்கிறார் சமந்தா.

சில வருடங்கள் காதலித்தபின், சமந்தா சைதன்யா ஜோடி இந்த வருட துவக்கத்தில் திருமணம் செய்ய நிச்சயம் செய்து கொண்டார்கள். தென்னிந்திய ரசிகர்களின் பிரியத்துக்கு பாத்திரமான இந்த ஜோடி அக்டோபர் 6-ஆம் தேதி கெட்டி மேளம் கொட்ட உள்ளார்கள். நியூயார்க்கில் ஹனிமூன் கொண்டாடவும் முடிவு செய்துள்ளனர். 'எ மாயா சேஸாவே’ படத்துக்காக முதன் முதலில் இந்த ஜோடி இங்கு சந்தித்த நினைவுக்காக தேனிலவை அங்கு கொண்டாட முடிவு செய்துள்ளார்கள். 2012 அந்த சந்திப்புக்குப் பிறகு அவர்கள் காதலிக்கத் தொடங்கினார்கள். கல்யாணத்துக்கு முன் சமந்தா நடித்து முடிக்க வேண்டிய சில படங்கள் உள்ளன. சிவகார்த்திகேயுடன் முதல் முறையாக ஜோடி சேரும் படமும் அதில் அடங்கும். இப்படத்தின் இயக்குனர் பொன்ராம். கிராமப் பின்னணியில் காமெடி கலந்த ரொமாண்டிக் திரைப்படம் இது. இந்தப் படத்துக்காக சமந்தா சிலம்பம் கற்றுக் கொண்ட விஷயம் எல்லோரும் அறிந்ததே. சூரியும் சிவாவுடன் சேர்ந்து காமெடியில் கலக்க உள்ளார்.

அதை அடுத்து ராம் சரணுடன் ரங்கஸ்தலம் 1985 என்ற படத்திலும் சம்பந்தா நடிக்க உள்ளார். இதுவும் கிராமத்துக் கதை தான். ராஜு காரி கதி 2 என்ற ஹாரர் காமெடி படத்தில் பேயாகவும் மிரட்ட உள்ளார் இந்தப் புதுப் பொண்ணு. அக்டோபர் மாதத்துக்குள் இதையெல்லாம் முடித்தாலும் முடிக்காவிட்டாலும் சரி சமந்தா மணக்கோலத்தில் இன்ஸ்டாகிராமில் தோன்றுவது உறுதி. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.