ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

1050 திரையரங்குகளில் 50 நாள்கள்: பாகுபலி 2 மகத்தான சாதனை!

பல தீபாவளிகளைக் கடந்து ஓடிய படங்களின் சாதனைக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால் அதற்கும் மேலானது.

News image
Updated On :16 ஜூன் 2017, 7:12 am

இது பல தீபாவளிகளைக் கடந்து ஓடிய படங்களின் சாதனைக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால் அதற்கும் மேலானது.

பாகுபலி 2 படம் நேற்றுடன் தனது 50-வது நாளைப் பூர்த்தி செய்தது. இந்தியா முழுக்க தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் 1050 திரையரங்குகளில் தனது 50-வது நாளைக் கடந்துள்ளது. ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது.

இந்தியத் திரையுலகில் வேறெந்தப் படமும் இத்தகைய சாதனையைச் செய்ததில்லை. வெளியான அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூலை அள்ளியதால் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இதுவரை ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்தியாவில் ஹிந்தி பாகுபலி 2 படம் ரூ. 500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு ஹிந்திப் படமும் இந்தியாவில் ரூ. 400 கோடி கூட வசூலித்தது கிடையாது. இந்நிலையில் ஹிந்தி பாகுபலி 2-வின் வசூல் ரூ. 500 கோடியைத் தாண்டி மகத்தான சாதனை புரிந்துள்ளது.

பாகுபலி 2 (ஹிந்தி) வசூல்

முதல் வாரம்: ரூ. 247 கோடி 
2-ம் வாரம்: ரூ. 143.25 கோடி 
3-ம் வாரம்: ரூ. 69.75 கோடி 
4-ம் வாரம்: ரூ. 29.40 கோடி 
5-ம் வாரம்: ரூ. 11.78 கோடி 
6-ம் வாரம்: ரூ. 5.35 கோடி 

மொத்த வசூல்: ரூ. 506.53 கோடி 

பாகுபலி 2 (ஹிந்தி) இந்தியாவில் நிகழ்த்திய சாதனைகள் 

ரூ. 100 கோடி: 3-வது நாள் 
ரூ. 200 கோடி: 6-வது நாள் 
ரூ. 300 கோடி: 10-வது நாள்
ரூ. 400 கோடி: 15-வது நாள்
ரூ. 450 கோடி: 20-வது நாள்
ரூ. 475 கோடி: 24-வது நாள்
ரூ. 500 கோடி: 34-வது நாள்

பாலிவுட்டில் சாதனை நிகழ்த்திய படங்கள்

முதல் ரூ. 100 கோடி படம்: கஜினி (2008)
ரூ. 200 கோடி: 3 இடியட்ஸ் (2009)
ரூ. 300 கோடி: பிகே (2014)
ரூ. 400 கோடி: பாகுபலி 2 (ஹிந்தி)
ரூ. 500 கோடி: பாகுபலி 2 (ஹிந்தி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.