கேரளத்தைச் சேர்ந்த அமலாபால் (25), 2010-இல் தமிழ் திரைப்படத் துறையில் "வீரசேகரன்' எனும் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் "சிந்துசமவெளி', "மைனா', "தெய்வத் திருமகள்', "தலைவா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதேபோல், நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான "கிரீடம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். பின்னர், "மதராசபட்டினம்', "தலைவா', "சைவம்' உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கினார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்த "தலைவா' படத்தை இயக்குநர் விஜய் இயக்கினார். அப்போது, இயக்குநர் விஜய்க்கும், அமலாபாலுக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இரு வீட்டார் ஒப்புதலுடன், கேரள மாநிலம் கொச்சியில் 2014-ஆம் ஆண்டு ஜூன் 7-இல் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பின்னர் சென்னை அடையாறு போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக் குடித்தனம் நடத்தினர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் சுமூகமாக பிரிவது என்று முடிவு செய்து சென்னை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் வார இதழுக்குப் பேட்டியளித்த நடிகை அமலா பால் மீண்டும் திருமணம் செய்துகொள்வது குறித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
நம் வாழ்க்கையில் எல்லாமே சந்தோஷமாக அமையாது. சில விஷயங்கள் சந்தோஷத்தையும் சில விஷயங்கள் சங்கடத்தையும் தரும். வாழ்க்கை என்கிற பயணத்தில் சில சமயம் எல்லோரும் இருப்பார்கள். சில சமயம் தனியாகப் பயணம் செய்யவேண்டி இருக்கும். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ்க்கையில் பயணம் செய்யவேண்டும். நான் வாழ்க்கையை இப்படித்தான் பார்க்கிறேன்.
என் வாழ்க்கையில் மீண்டும் காதல், திருமணம் உண்டு. நான் என்ன சன்னியாசம் வாங்கிக்கொண்டு இமயமலைக்கா போகப்போகிறேன்? நிச்சயம் மீண்டும் திருமணம் செய்துகொள்வேன் என்றார்.
அமலா பால் தற்போது பல படங்களில் நடித்துவருகிறார். அமலா பால் நடித்துவரும் படங்கள் என அவரது தரப்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள படப்பட்டியல்:
1.சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் வேலையில்லா பட்டதாரி 2.
2. சுசி கணேசன் இயக்கும் திருட்டு பயலே 2.
3. முண்டாசுப்பட்டி இயக்கிய ராம் இயக்கும் மின்மினி படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
4. சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக நடிக்கும், பாஸ்கர் ஒரு ராஸ்கல்.
5. ஜோன்ஸ் மற்றும் ஷாலோம் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகி வேடம்.
6. பாலிவுட்டில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற குயின் படத்தின் மளையாளப் பதிப்பில், ரேவதி இயக்கத்தில் கதாநாயகி வேடம்.
7. கண்ணன் இயக்கத்தில் உருவாகும் அச்சாயன்ஸ் என்கிற மலையாளம் படம்.
8. அனூப் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரில்லர் படம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


