பிரபல டோலிவுட் நடிகரும், கல்வித் தந்தையுமான மோகன்பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜ், தற்போது தான் நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களுடன் தனது நடிப்புலக பங்களிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்திருக்கிறார். மோகன்பாபு தெலுங்கில் மட்டுமல்ல, தமிழிலும் ரஜினி, கமலுடன் சில படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். சென்னை ஒய்.எம்.சி.ஏ கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக சில வருடங்கள் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. உடற்பயிற்சி ஆசிரியர், நடிகர், கல்வியாளர், என்பதைத் தாண்டி சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர் என்ற வகையில் மோகன்பாபுவை தமிழ் ரசிகர்களும் நன்கறிவர்.