டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கால் நூற்றாண்டுக்குப் பின் ‘காலா’ வில் இணைகிறார்களா ரஜினியும், மம்மூட்டியும்?!

‘தளபதி’ யில் ரஜினி, மம்மூட்டி இணை திரையில் நிகழ்த்திய அருமையான நடிப்பைக் கண்டு களித்த தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் அவர்களது காம்பினேஷனில் மீண்டுமொரு திரைப்படம்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:02 am

சரோஜினி

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் நடந்து வரும் நிலையில், படத்தைப் பற்றி தினமொரு பரபரப்புச் செய்தி வெளிவருவது வழக்கமாக இருக்கிறது. முதலில் படத்தின் தலைப்பு குறித்து எழுந்தது சர்ச்சை. அதைத் தொடர்ந்து மும்பை தாதா ஒருவரது வாழ்வை அடிப்படையாகக் கொண்ட படம் ‘காலா’ என இணையத்தில் வெளியான செய்திகளின் அடிப்படையில், அந்த மும்பை தாதாவின் மகன் ரஜினிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தது சில நாட்களுக்கு பரபரப்புச் செய்தியாக இருந்தது. அந்தப் பரபரப்பு ஓயும் முன் ‘காலா’ திரைப்படத் தலைப்பும், கதையும் என்னுடையது. அதைப் காப்பி அடித்து விட்டது இயக்குனர் தரப்பு என உதவி இயக்குனர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டது. இதெல்லாம் ‘காலா’ வைப் பொறுத்த வரை பழைய பரபரப்புகள்! காலாவின் தற்போதைய ஸ்பெஷல் பரபரப்பு என்ன தெரியுமா? 

இயக்குனர் மணிரத்னத்தின் ‘ தளபதி’ திரைப்படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட (கால் நூற்றாண்டு) 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் ரஜினியும், மம்மூட்டியும் ‘காலா’ வில் இணைந்து நடிக்கவிருக்கின்றனராம். இப்படி ஒரு விண்ணப்பத்தை ரஜினியின் மருமகனும் நடிகரும், காலா திரைப்படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ், மம்மூட்டியிடம் முன் வைத்த போது; மம்மூட்டி மிக மகிழ்ந்து உடனே ஓ.கே சொன்னார் என்றொரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இது குறித்து இயக்குனர் தரப்பில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையிலும் ‘தளபதி’ யில் ரஜினி, மம்மூட்டி இணை திரையில் நிகழ்த்திய அருமையான நடிப்பைக் கண்டு களித்த தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் அவர்களது காம்பினேஷனில் மீண்டுமொரு திரைப்படம் என்ற அறிவிப்பை மனமுவந்து வரவேற்பார்கள் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.