சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் - இடம் பொருள் ஏவல். பல வருடங்களாக வெளிவராமல் உள்ளது. இந்தப் படத்தை அனைவரும் கிட்டத்தட்ட மறந்துவிட்ட நிலையில் இப்படம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் சீனு ராமசாமி.
பணப்பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு தாமதமாகிறது. கமல் நடித்த உத்தம வில்லன் படத்தினால் தயாரிப்பாளர்களுக்குப் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கமல் முன்வந்து நஷ்டத்தினால் உண்டான பண இழப்புக்குகளுக்கு உதவி செய்வார் என நம்பிக்கையுடன் உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் இதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்த சீனு ராமசாமி, இடம் பொருள் ஏவல் படம் வெளியே வர வேண்டுமென்றால் 'உத்தமவில்லன்' கமல் அய்யாவும் அஞ்சான் சூர்யாவும் மனது வைத்தால் ஒருவேளை வெளிவரலாம் என்று கூறியுள்ளார்.
படம் எப்படி?: படம் மிக நன்றாக வந்துள்ளது. படம் பார்த்தவர்களும் படத்தைப் பற்றி சிறப்பான முறையில் கருத்து சொல்லியுள்ளார்கள். எல்லாம் சரியாகப் போனால், இந்த வருடம் இடம் பொருள் ஏவல் படம் வெளியாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். வைரமுத்துவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தது இந்தப் படத்திலிருந்துதான். 2014 டிசம்பரில் பாடல்கள் வெளிவந்தன.
சீனு ராமசாமி அடுத்ததாக இரு படங்களை இயக்கத் தயாராக உள்ளார். ஒன்றில் விஜய் சேதுபதியும் மற்றொன்றில் சசிகுமாரும் நடிக்க உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


