எனக்கு இதில் பிடிக்காத ஒரே விஷயம் எதுவென்றால்; ‘பரணியை பொறுக்கி’ என்று அந்த நிகழ்ச்சியிலுள்ள பெண் பங்கேற்பாளர்கள் புகார் கூறும் போது என்னால் அத்தகைய காட்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பரணியை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் அப்படிப்பட்டவர் அல்ல! அவர் புதிதாக நடிக்க வந்திருக்கும் ஒரு கலைஞன். அவருக்கென ஒரு குடும்பம் இருக்கிறது. மனைவி இருக்கிறார், குழந்தை இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இம்மாதிரியான சித்தரிப்புகளால் அவரது குடும்பத்திலுள்ளவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? இது போன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு நடிகரோ, நடிகையோ அசிங்கப்படுத்தப் படும் போது அல்லது அச்சுறுத்தப்படும் போது அதை டி.வியில் பார்த்துக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் மாதிரி ஏதாவது வந்து விட்டால் அதற்கு யார் பொறுப்பெடுத்துக் கொள்வார்கள்? சம்மந்தப்பட்ட அந்த டி.வி நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்ளுமா? அல்லது கையெழுத்துப் போட்டு போட்டிக்காக அங்கே நுழைந்தார்களே அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்களா?