இன்னொசென்ட்டின் இந்த பதிலைக் கேட்டு, பாவனா சம்பவத்துக்குப் பிறகு, நடிகை மஞ்சு வாரியர் தலைமையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மலையாள நடிகைகள் பாதுகாப்புக் கூட்டணியான WCC (Woman in Cinima Collective) உடனடியாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. “ அவரது கூற்றை எங்களால் ஒப்புக் கொள்ள முடியாது... இப்போதும் பட வாய்ப்புகளுக்காக இளம் நடிகைகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை தரும் செயல் மலையாளத் திரையுலகில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. எங்களது சக நடிகைகளான பார்வதி மேனன், லஷ்மி ராய் உள்ளிட்டோர் கூட அப்படியான பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் தான் என்பதை அவர்களே கூறத் தயங்கவில்லை. இப்படி கண் கூடான நேரடி ஆதாரங்கள் இருக்கும் போது... பொது ஊடகங்களில் பொறுப்புணர்வோ, கவனமோ இன்றி இளம் நடிகைகளைப் பற்றி இன்னொசென்ட் போன்ற மூத்த நடிகர்கள் இப்படியான கருத்துக்களைப் பகிரக் கூடாது” என்று WCC அமைப்பு தெரிவித்துள்ளது.